மனிதனிடம் மறைந்திருக்கும் ஆற்றல்கள் அறிவார்ந்த வெளிப்பாடுகளாக மாற இந்நூலாசிரியர் பல்வேறு எடுத்துக்காட்டுகளை முன்வைக்கிறார். வழக்கமாக, சாதாரண சூழ்நிலைகளில் ஒருவரின் ஆற்றல்கள் செயலற்ற நிலையில் இருக்கும். ஆனால் நெருக்கடியான சூழ்நிலையை, அதிர்ச்சியை எதிர்கொள்ளும் தருணத்தில் மனம் அசாதாரணமாக எதிர்வினையாற்றுகிறது; சவால்களை சந்திக்கத் தயாராகிறது. கற்பனை செய்திராத தடைகளைத் தாண்டிச் செல்வதும், உரிய திசைகளை நோக்கி தம்மைச் செலுத்திக் கொள்வதும் இச்செயல்பாடுகளில் அடங்கும். தனிநபராகிய ஒவ்வொருவரிடமும் இருக்கும் அளப்பரிய ஆற்றல்கள், திறன்கள் ஆகியவற்றை அடையாளம் காணும் வண்ணமாக சாதாரண / அசாதாரண வாழ்வனுபவங்களி இந்நூல் வாசகர்களின் முன் வைக்கிறது. மனச்சோர்வடையவோ தளர்வடையவோ தேவையில்லை என்பதைக் கூறி, உள்ளாற்றல்களை பயன்படுத்தக் கூடிய உடன்பாடான வழிமுறைகளைச் சோதித்துப் பார்க்க வேண்டு என வலியுறுத்துக்கிறது