இந்த நூல் ஆசிரியரின் 30 ஆண்டுக்கால விரிவான ஆய்வின் விளைவாகும். நவீன அறிவின் துணையுடனும் இன்றைய அறிவியல் முறைக்கு ஒத்திசைவுடனும் மதத்தின் அடிப்படையான போதனைகளை இந்த நூல் பதிவு செய்கிறது. அறிவியலாளர் முன்வைக்கும் கோட்பாடுகள் கல்விப்புலம் சார்ந்தும் அறிவு ரீதியாகவும் எவ்வாறு ஏற்புடையனவாக, புரிந்துக்கொள்ளக் கூடியவனவாக இருக்கின்றனவோ அதுபோல சமய போதனைகளும் உள்ளன என முழுமையான ஆய்விற்குப் பிறகு ஆசிரியர் முடிவுக்கு வந்திருக்கிறார்.
...1400 ஆண்டுகால இஸ்லாமிய வரலாற்றில் எண்ணற்ற நூல்கள் வெளிவந்துள்ளன. மனித குலத்தை இறைவனின் பாதையை நோக்கி அழைப்பதில் தெளிவாகவும் அழுத்தமாகவும் தம் வேண்டுகோளை முன்வைத்தவை சில நூற்களே. அந்த வகையில் இந்த நூலும் ஒன்று. இதில் சந்தேகம் இல்லை. - அல் அஹ்ரம் (கெய்ரோ)